Connect with us

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு… காரணம் என்ன..? பொதுமக்கள் அச்சம்…!

Latest News

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு… காரணம் என்ன..? பொதுமக்கள் அச்சம்…!

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் அதற்கான காரணம் என்ன என தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய அம்பாசமுத்திரம், விகேபுரம், அனவன் குடியிருப்பு, அகஸ்தியர் பட்டி, செட்டிமேடு, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, அயன் சிங்கம்பட்டி, தென்காசி மாவட்டம் கடையம், பொட்டல்புதூர், முதலியார் பட்டி, பாப்பன்குளம், ஆழ்வார்குறிச்சி, கல்யாணி புரம் உள்ளிட்ட பகுதிகள் நேற்று நண்பகல் 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.

சில வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வு காரணமாக வீடுகளில் பாத்திரங்கள் உருண்டது. வீடுகளில் இருந்த ஜன்னல் கதவுகள் குலுங்கின. மேலும் ஒரு சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பூமிக்குள் மோட்டார் ஓடுவது போல் சத்தம் வந்ததாக பொதுமக்கள் கூறியிருந்தார்கள். இதனால் பலரும் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே தெருவுக்கு வந்து நின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் கூறியிருந்தார்கள். அப்போது அவர்கள் தெரிவித்த போது 2017 ஆம் ஆண்டு 29ஆம் தேதி தென்காசி மற்றும் நெல்லை பகுதிகளில் இது போன்ற நில அதிர்வு ஏற்பட்டது. தற்போது இரண்டு மாவட்டங்களிலும் பெரும்பாலான கிராமங்களிலும் மக்கள் லேசான நில அதிர்வை உணர்ந்துள்ள நிலையில் அதிகாரிகள் அப்படி எதுவும் தேசிய நிலநடுக்கம் மையத்தில் பதிவாகவில்லை என்று தெரிவித்திருப்பதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கூறும் போது ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை. ரெக்டர் அளவு ஒன்று முதல் மூன்று வரையிலான லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்த இரண்டு மாவட்டங்களிலும் தினம் தோறும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுவது தான் இந்த நிலா அதற்கு காரணம் என இயற்கை பாதுகாப்பு வாழ சங்கத்தினரும் சமூக ஆர்வலர்களும் புகார் கூறி வருகிறார்கள்.

More in Latest News

To Top