Connect with us

நகைச்சுவைய பகைச்சுவையாய் மாற்றாதீர்கள்… அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்…!

tamilnadu

நகைச்சுவைய பகைச்சுவையாய் மாற்றாதீர்கள்… அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்…!

நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்ததை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து இருந்தார் . அப்போது பேசிய அவர் நானும் ரஜினியும் எப்போது போல் நண்பர்களாக தான் இருப்போம். நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் மு க ஸ்டாலினை பார்த்து பேசியிருந்தார். இதற்கு அமைச்சர் துரைமுருகன் மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போய், தாடி வளர்ந்து சாகுற நிலையில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

அதை மறந்துவிட்டு ஏதோ ரஜினிகாந்த் பேசுகின்றார் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து ரஜினிகாந்த் துறைமுருகன் எனது நீண்ட நாள் நண்பர். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு எப்போதும் தொடரும். துரைமுருகனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் துரைமுருகன் தற்போது நகைச்சுவையாக சொன்னதை பகைச்சுவையாக மாற்றாதீர்கள் என்று கூறியிருக்கின்றார். இருவரது பேச்சும் சர்ச்சையான நிலையில் இருவரும் இது குறித்து தற்போது விளக்கம் அளித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

More in tamilnadu

To Top