ட்ரம்ப் ஒரு பயங்கரவாதி- அதிர்ச்சி கொடுக்கும் ஈரான் அதிபர்

ட்ரம்ப் ஒரு பயங்கரவாதி- அதிர்ச்சி கொடுக்கும் ஈரான் அதிபர்

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஜோ பைடன் விரைவில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கிறார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப் வெளியேறுவது குறித்து ஈரான் அதிபர்

ஹசன் ரூஹானி, டிரம்ப் வெளியேறுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜோ பைடனின் வருகையைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் டிரம்ப் வெளியேறுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சட்டவிரோத செயல்களில் டிரம்ப் ஈடுபட்டார்; அவர் ஒரு பயங்கரவாதி” என்று கூறினார்.