Latest News
இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை!…அப்புறம் என்ன ஆர்டர் போட்றவேண்டியது தானே?…
இந்தியா மாதிரியான நாடுகளில் தங்கம் என்பது ஆபரணமாக பார்க்கப்படுவது மட்டும் கிடையாது. அது ஒரு முதலீட்டு பொருளாகவும் கருதப்படுகிறது. தங்கம் தமிழ் நாட்டை பொறுத்த வரை சுப நிகழ்ச்சிளில் பங்கேற்கும் போது கட்டாயம் தேவையான ஒன்றாகவே இருந்துவருகிறது.
திருமண சடங்கு முதல் காது குத்து வரை தங்கத்திற்கென ஒரு தனித்துவம் இருந்து தான் வருகிறது. இப்படி அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்கியும் வருகிறது. இதனால் நாளுக்கு நாள் தங்கத்திற்கான மவுசு அதிகரித்துக் கொண்டு தான் போகிறது.
தங்கத்தின் தாக்கம் இங்கே அதிகமாக இருப்பதால் பல நேரங்களில் அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுகிறது.
இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு அது இறங்கு முகத்திலேயே இருக்கிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ரூ.680/- குறைந்துள்ளது சவரனுக்கு. ஆக ஒரு சவரன் 53.560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இன்று.
ஒரு கிராமிற்கு என்பத்தி ஐந்து ரூபாய் குறைந்து ஆராயிரத்து எழ நூற்றி என்பது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ஆபரணத்தங்கத்தின் விற்பனை விலையில் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதே போல ஒரு கிலோ வெள்ளி 96, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராமின் விலை 96.50 ரூபாயாக இருக்கிறது இன்று. வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது தங்க நகை பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதே நிலை தொடர்ந்து இன்னும் குறைய வாய்ப்பிருக்குமா என்ற கேள்வியையும் அவர்களின் மனதிற்குள்ளே எழவைத்துள்ளது ஆபரண தங்கத்தின் இன்றைய விலை குறைவு.