tamilnadu
நாக்கை அடக்கலன்னா, மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவார்கள்…. அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை…!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாக்கை அடக்காவிட்டால் மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவார்கள் என்று செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “பாஜக தலைவர் அண்ணாமலை நீண்ட காலமாகவே விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஆதாரமற்ற கருத்துக்களை கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றார்.
கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து அவர் பதவி விலகி விட்டு பாஜகவில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பதவி உயர்வு பெற்ற அவர் தமிழக பாஜக தலைவராக மாறினார். 2016 சட்டமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் வெறும் 12 லட்சம். வாக்கு சதவீதத்தில் 2.86 தான். அதேபோல 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டு வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
சமீபத்தில் நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. பாமகவும் வெற்றி பெறவில்லை. 18 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். அண்ணாமலை கூட்டணியில் போட்டி போடுகிற போது எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் என்பதை துல்லியமாக கூற முடியாது.
நேற்று மலையில் முளைத்த காளானை போல அண்ணாமலை இருக்கின்றதார். அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களே உங்கள் நாவை அடக்கி கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் வருகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் உங்களது மக்கள் விரோத போக்கிற்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள். நீங்களாக உங்களை திருத்திக் கொள்ளவில்லை என்றால், மக்கள் உங்களுக்கு கொடுக்கும் மரண அடி மூலம் நீங்கள் திருத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கின்றேன்” என தெரிவித்திருக்கின்றார்.