Connect with us

திமுக தான் பாஜகவின் மெயின் டீம்… நீங்க எங்கள சொல்லுறீங்க… சீமான் கடும் விமர்சனம்…!

tamilnadu

திமுக தான் பாஜகவின் மெயின் டீம்… நீங்க எங்கள சொல்லுறீங்க… சீமான் கடும் விமர்சனம்…!

தமிழ்நாட்டில் இருக்கும் திமுக கட்சி தான் பாஜகவின் மெயின் டீம் என்று சீமான் விமர்சனம் தெரிவித்திருக்கின்றார்.

கோவையில் அரசு கல்லூரியில் இருந்து நேற்று தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு சில கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். உலக பழங்குடியினர் தினத்தை ஒட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் நாம் தமிழர் கட்சி பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார்.

அப்போது பேசிய அவர் தெரிவித்திருந்ததாவது” நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறவே இப்படி தமிழ் புதல்வன் திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கி இருப்பதாக குற்றம் சாட்டியை சீமான், தமிழ் புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

திராவிட கட்சிகள் காசே இல்லாமல் கூட்டத்தை கூட்டினால் கட்சியை கலைத்து விட்டு செல்வதாக சவால் விட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி பாஜகவின் B -டீம் என்று கூறிவரும் நீங்கள்தான் பாஜகவின் மெயின் டீம்” என்று விமர்சனம் செய்து இருக்கின்றார்.

More in tamilnadu

To Top