அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி இருக்கின்றது.
அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் நடைமுறை இருக்கின்றது. அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் எஸ்.இ.டி.சி என்று அழைக்கக்கூடிய நீண்ட தூரம் செல்லக்கூடிய பேருந்துகளில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதியும் இருப்பதால் அதிக அளவில் பயணிக்க தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் கடந்த 1, 2ம் தேதிகளில் முன்பதிவு செய்து வருகிறார்கள். அக்டோபர் 28 மற்றும் 29 தேதிகளில் பயணம் செய்வதற்காக முன்பதிவு தொடங்கி இருக்கின்றது.
தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன. அதேபோல் பண்டிகை முடிந்து நவம்பர் 3-ம் தேதி அங்கிருந்து புறப்பட்ட சென்னை வருவதற்கும் பல பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பிவிட்டன. 1500 பேருந்துகளுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடைபெற்று வருகின்றது. இது தவிர தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்படும் அப்போதும் முன்பதிவு தொடங்கும் என்று கூறப்படுகின்றது.











