tamilnadu
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..? வானிலை தகவல்…!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது.
இந்த சூழலில் தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
அதன்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் சென்னையில் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.