Latest News
திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு… ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு…!
திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஊர்வலத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். பக்தர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார்கள். விநாயக சதுர்த்தி முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 242 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 932 இடங்களில் என மொத்தம் 1174 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றது.
இதையடுத்து விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.விநாயகர் சிலை கரைப்பதற்கு எடுத்துச் சொல்லும் போது சிலை அமைப்பாளர்கள் மற்றும் சிலை அமைப்பு இயக்கத்தினரின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலை அமைப்பாளர்கள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும் விநாயகர் சிலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தனிப்பட்ட தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஊர்வலத்தின் போது ஒலிபெருக்கியின் சத்தம் குறிப்பிட்ட டெசிமலுக்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்குள் முடித்து விட வேண்டும் .
ஊர்வலம் செல்லும் பாதையில் எந்த ஒரு இடத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் ஊர்வலத்தை இடைநிறுத்தம் செய்யாமல் விரைந்து சிலையை கரைக்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும். மது அருந்தியவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு சிறு பிரச்சனையும் இன்றி ஊர்வலம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
சிலைகள் கரைக்க கொண்டு செல்லும்போது நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். 3 சக்கர வாகனம் மாட்டு வண்டிகளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு அனுமதி கிடையாது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்து இருக்கின்றார்.