Connect with us

50 சதவீத நோயாளிகளுக்கு இந்த பிரச்சனை இருந்தது! மருத்துவர்கள் சொல்லும் உஷார் தகவல்!

Corona (Covid-19)

50 சதவீத நோயாளிகளுக்கு இந்த பிரச்சனை இருந்தது! மருத்துவர்கள் சொல்லும் உஷார் தகவல்!

கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளில் 50 சதவீதத்தினருக்கு செரிமானப் பிரச்சனையும் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாக இதுவரை சளிபிடித்தல், இருமல், தொண்டைப் புண் மற்றும் வலி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் சொல்லப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது செரிமானப் பிரச்சனை கூட இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.  இது சம்மந்தமாக  கொரோனா நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வுகளில் 50 சதவீதம் பேருக்கு செரிமானப் பிரச்சனைகள் இருந்துள்ளன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

More in Corona (Covid-19)

To Top