தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு 442 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த ஆண்டு வெறும் 433 கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 9 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பதை தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. மாணவர்கள் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற ஒரு சில காரணங்களினால் தமிழகத்தில் இருக்கும் 9 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.