tamilnadu
நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்றவர் கலைஞர் கருணாநிதி… அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்…!
சென்னையில் இன்று கலைவாணர் அரங்கில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நூறு ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்று வருகின்றது. இதில் கலைஞர் நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பேசிய அவர் கூறியிருந்ததாவது: “நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்றவர் கலைஞர் கருணாநிதி.
தமிழ்நாட்டு மட்டும் அல்ல, நாட்டின் வளர்ச்சிக்கு சிந்தித்து துணை நின்றவர் கலைஞர். கருணாநிதியின் போராட்டங்கள் மிக வலிமையானது. மாநில முதலமைச்சர் கொடியேற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்தவர் கலைஞர். மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தவர்.
ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்களை கொண்டு வந்தவர் கலைஞர். தமிழ் இலக்கியம், சினிமாவிற்கு கலைஞர் அளித்த பங்கு மிகப்பெரிய அபரிவிதமானது. இந்தியாவின் கூட்டாட்சியை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் கலைஞர்” என்று அவரை குறித்து பல விஷயங்களை புகழ்ந்து பேசி இருந்தார் மத்திய அமைச்சர் ராஜநாத்சிங்.