Connect with us

தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்திலிருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட்… எதற்கு தெரியுமா..? வெளியான தகவல்…!

Latest News

தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்திலிருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட்… எதற்கு தெரியுமா..? வெளியான தகவல்…!

பாலியல் புகார் காரணமாக தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்திலிருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றார்.

ஆந்திர மாநிலத்தில் திரைப்பட நடன கலைஞராக இருக்கும் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர். இவர் மீது இளம்பெண் ஒருவர் ராய்துர்க்காம் போலீசில் பாலியல் புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் நடன இயக்குனர் ஜான் மாஸ்டர் மீது பலாத்காரம் கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் நடன இயக்குனர் மீது அவரிடம் வேலை பார்க்கும் பெண் நடன கலைஞர் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியிலிருந்து நடன இயக்குனர் ஜான் மாஸ்டரை நீக்கினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கானா பிலிம் சேம்பரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் கொடுத்திருக்கின்றார். இதையடுத்து தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்திலிருந்து ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் அவரை நடன இயக்குனர் சங்கத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

More in Latest News

To Top