tamilnadu
சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு… வெளியான தகவல்…!
சென்னையில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலை எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயித்து மத்திய அரசு அனுமதி கொடுக்கும் .அதே போல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளே நிர்ணயித்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு சமையல் மற்றும் வணிக சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றது.
அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை 7.50 உயர்த்தப்பட்டு 1,817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை மாற்றம் எதுவும் இல்லாமல் 818 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.