Connect with us

‘Zero is Good’ வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே வீரர்கள்… எதற்காக தெரியுமா..?

tamilnadu

‘Zero is Good’ வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே வீரர்கள்… எதற்காக தெரியுமா..?

சென்னையில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சென்னை மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகம் நடந்து வருகின்றன. விபத்துகளை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று சிந்தித்த சென்னை மாநகர போக்குவரத்து துறை என்ற முயற்சியை கையில் எடுத்திருக்கின்றது.

இந்த முயற்சி மூலமாக விபத்துகளை தடுக்க முடியுமா? என்றால் நிச்சயமாக அதற்கு பதில் இல்லை. இருப்பினும் முயற்சிக்கு முழு பங்களிப்பை அளிக்க போக்குவரத்து துறை முடிவெடுத்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. தலைக்கவசம் உயர்கவசம் என்று தெரிந்தும் பலரும் தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுகிறார்கள்.

செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டி பலர் விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள். போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்கிறார்கள். அனைத்து விதிமுறைகளையும் நாம் பின்பற்றினால் நிச்சியமாக விபத்துகளை தடுக்க முடியும். வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி சென்னைக்கு விபத்தில நாளாக கொடுக்க போக்குவரத்து துறை முடிவெடுத்து இருக்கின்றது.

இதனால் Zero is Good என்ற பிரச்சாரத்திற்கு ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தொடர்பான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றது. அதில் கேப்டன் ருத்ராஜ், ரஹானே, பிராவோ, துபே, ரச்சின் ரவீந்தரா, துஷார் பாண்டே ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசி இருக்கிறார்கள். இந்த வீடியோ வந்து சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

More in tamilnadu

To Top