இந்தியாவில் கொரோனா வைரஸ் படுதீவிரமாக பரவி வருவதால் மத்திய அரசு பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine மலேரியாவுக்கு தரப்படும் மாத்திரை) என்ற மாத்திரை கொரோனா பாதித்தவருக்கு பயன்படுத்தலாம் என்று பல்வேறு நாடுகள் அறிக்கையை தொடர்ந்து, இந்தியாவிலும் இம்மாத்திரையை பயன்படுத்த மத்திய அரசு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்து பரிந்துரை செய்தது.
இதனை தொடர்ந்து, இப்பொழுது இந்தியாவில் கொரோனா தொற்று அதிக தீவிரமாக பரவி வருவதால், அதற்கு பயன்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த மாத்திரையை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் வேறு சில மருந்துகளையும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது. ஏற்கனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துஇருந்தால், குறிப்பிட்ட அளவு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும் என்றும் நிபந்தனை அளித்துள்ளது.