Latest News
வானம் ஏமாத்துது…ஆனா அருவி அலப்பறை காட்டதான் செய்யுது!…இன்றைய குற்றாலம்…
ஜூன், ஜூலை மாதங்களில் சுற்றுலா என்றாலே நம்மில் பலரின் நினைவுக்கு வருவது குற்றாலமாகத்தான் இருக்கும். காரணம் சீசன் நேரங்களில் மட்டுமே இங்கு அருவிகளில் தண்ணீர் கொட்டும். மற்ற நேரங்களில் வெறும் பாறைகள் மட்டுமே பாட்டு படிக்கும். இதனால் தான் இந்த மாதங்களில் குற்றாலம் செல்ல பலரும் ஆர்வம் காட்டுவார்கள்.
அதிலும் விடுமுறை தினங்கள் என்றால் போதும் குற்றால அருவிகளில் குளிக்க க்யூவில் காத்து நிற்பார்கள் சுற்றுலா பயணிகள். ஆனந்த குளியல் போட வருபவர்களை மகிழ்ச்சியும், உற்சாகமும் குறையாமல் பார்த்துக் கொள்ளும் குற்றால அருவிகள்.
ஒரு சில நேரங்களில் ஏமாற்றத்தை கொடுக்கும். இந்தாண்டு குற்றாலத்தில் சீசன் துவங்கி அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
மெயின் அருவி, ஃபைவ் ஃபால்ஸ், பழைய குற்றாலம் உள்ளிட்ட பிரதான அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் விழுந்து வருகிறது. குற்றாலத்தின் இன்று காலை பதினோறு மணி நிலவரப்படி அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி குளிக்க வருபவர்களை ஆனந்தப்படுத்தியது.
அதே நேரத்தில் வெயிலும் வெளுத்து வாங்கத் தான் செய்கிறது. சொல்லிக்கொள்ளும் அளவில் காற்றும்ன் பெரிதாக இல்லை. சாரல் விழுவதற்கான அறிகுறிகள் இன்று காலை பதினோறு மணி வரை தென்படவேயில்லை. ஒரு பக்கம் இது சோர்வை ஏற்படுத்தினாலும் அருகவிகளில் விழும் தண்ணீரின் அளவு அதனை எல்லாம் மறக்கடிக்கச் செய்து விடுகிறது.
சுற்றுலா பயணிகளின் கூட்டம் சுமாராகவே இருந்தது. கூட்டம் குறைவாக காணப்பட்டது இன்று குற்றாலத்தில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அருவிகளில் அதிக நேரம் குளித்து ஆனந்தமாக இருக்கும் விதமாக அமைந்ததால்.