Latest News
வெயிலும் அடிக்கத்தான் செய்யுது…ஆனா குளிக்க போனா வேஸ்ட்டும் ஆகாதே!…குற்றாலம் இன்று…
குற்றால சீசனில் சின்ன சின்ன மாற்றங்கள் இருந்து கொண்டே தான் வருகிறது. ஒரு நாள் வெயில்,ஒரு நாள் காற்று, ஒரு நாள் மந்தம், ஒரு நாள் சாரல் இப்படி மாறி மாறி தான் இருந்து கொண்டிருக்கிறது சீசன் நிலரவரம். வார இறுதி நாட்களில் அலை மோதிய மக்கள் கூட்டம் வேலை நாட்களில் குறைவாகவே இருக்கிறது.
பள்ளி, கல்லூரிகள் எல்லாம் இயங்கி வருவதனால் பெற்றோர்கள் வார நாட்களில் இன்ப சுற்றுலா செல்வதை தவிர்த்தே வருகின்றனர். அதனையும் மீறி வரும் சிலரால் தான் வேலை நாட்களிலும் குற்றாலாம் கொஞ்சம் பிஸியாகவே காட்சியளிக்கிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் குலுங்கியது குற்றாலம்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை பதினோரு மணி நிலவரப்படி எல்லா அருவிகளிலும் தண்ணீரின் வரத்து இயல்பாகவே இருந்து வருகிறது. குளிக்க வருவோரின் ஆசைகளை பூர்த்தி செய்ய்யும் விதமாகத்தான் இருக்கிறது நீர் வரத்து.
கடந்த வாரம் போல இந்த வாரம் குளிக்க தடை ஏதும் இதுவரை விடுக்கப்படாமல் இருப்பது சுற்றுலாப் பயணிகளை இப்போது வரை மகிழச்செய்துள்ளது. ஐந்தருவியில் வழக்கம் போல குறையாத மக்கள் கூட்டம் இருந்து வருகிறது. பழைய குற்றாலம், மெயின் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கனிசமாகவே காணப்படுகிறது.
வெயிலின் தாக்க நேற்றைவிட இன்று சற்று அதிகமாகவே காணப்படுகிறது. சாரல் இல்லாத நிலை தான் இருந்து வருகிறது. அவ்வப்போது தென்றல் காற்று வருடிச்செல்கிறது. மந்தாமான சூழலே குற்றாலத்தில் இருந்து வரும் நேரத்தில், குளிக்க வருபவர்களுக்கு சாதகமான சூழ்நிலை தான் இன்று இருக்கிறது.