Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

Falls
Entertainment Latest News tamilnadu

வெயிலைத் தவிர வேற ஒன்னும் இல்லையாமே இன்னைக்கு குற்றாலத்துல…

நேற்றிரவு குற்றால மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளி திடீரென மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் குளு, குளு சூழலே நிலவியது.

யாரும் எதிர்பாராத விதமாக பெய்த இந்த திடீர் மழை மற்றும் காற்று குளிக்க வந்தவர்களுக்கு சிறிது அதிரிச்சியே காணப்பட்டது. இருந்தபோதிலும் அருவிகளில் குளித்து ஆனந்த நீராடினார்கள் பலரும்.

இன்று காலை பதினோரு மணி நிலவரப்படி அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து இயல்பாகவே இருந்தது. ஆனால் நேற்று காலை காணப்பட்டதை விட இன்று வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ஃபைவ்ஃபால்ஸ், மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பிரதான அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வார நாட்களில் இருக்கும் அதே அளவில் தான் காணப்பட்டது.

Courtallam
Courtallam

இன்று காலை முதல் வெயில் உச்சக்கட்ட அளவிலேயே இருந்தம் வருகிறது. காற்று, சாரலுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என சொல்லும் படியாகத் தான் இருந்து வந்தது. சுற்றுலா பயணிகளின் தேர்வாக எப்போதுமே இருந்து வரும் இந்த மூன்று அருவிகளிலும் கூட்டம் இன்று காலை சுமாராகவே இருந்து வந்தது.

நேற்றைய தினம் மாலை நேரத்திற்கு பிறகு ஏற்பட்ட மாற்றம் இன்று ஏற்படக்கூடும் என்ற எதிபார்ப்பு இருந்தும் வருகிறது. மழை பொழிவு நேற்று துவங்குவதற்கு முன்னர் சிறிது நேரம் ரம்மியமான சூழல் நிலவியது.

மழை பெய்யத் துவங்கிய பிறகே நிலைமை தலை கீழாக மாறியது. இன்று காலை பதினோரு மணி வரை  இருந்த நிலையால் இன்றைய சீசன் நிலவரத்தில் ஏமாற்றம் தான் இருந்து வந்தது.