Entertainment
இன்னைக்கு போகலாமா வேணாமா?…குற்றால சீசன் எப்படி தான் இருக்கு…
நேற்று முழுவதும் வானம் கூராப்போடு காணப்பட்டது குற்றாலத்தில். லேசான தென்றல் காற்று, திடீர் திடீரென தலை காட்டியது சாரல். அருவியில் கொட்டிய தண்ணீரின் அளவும் மாறுபடத்தான் செய்தது. ஆனாலும் ஆனந்தம் அணு அளவும் குறையவில்லையாம் நேற்று குளிக்க சென்றவர்களுக்கு. இப்படி தான் கழிந்தது நேற்றைய பொழுது குற்றாலத்தில்.
இன்று காலை பதினோரு மணி நிலவரப்படி அருவிகளில் கொட்டிய தண்ணீர் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை தூண்டத்தான் செய்தது.
குற்றாலத்தின் பிரதான அருவிகளான ஃபைவ் ஃபால்ஸ், மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் மிதமான அளவிலேயே தண்ணீர் விழுந்து வருகிறது. ஆனால் நேற்றை போல இல்லாமல் வெயில் சற்று தலை தூக்கியே காணப்பட்டது.
காற்று அவ்வப்போது அடித்து வந்தாலும் சீசன் நேரத்தில் குற்றாலத்திற்கே உரித்தான குளுமையான சூழல் இன்று தென்படவில்லை இதுவரை. வார வேலை நாட்களில் குற்றாலத்திற்கு இன்ப சுற்றுலா வரும் கூட்டத்தின் அதே எண்ணிக்கை தான் இன்றும் காணப்பட்டது. தண்ணீர் குறைவாக விழுந்தாலும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம் குளித்து மகிழ.
சாராலையும், காற்றையும் எதிர்பார்த்து வந்தவர்களுக்கு இன்றைய தினம் காலை பதினோரு மணி நிலவரப்படி ஏமாற்றம் தான் கிட்டியது என்றே சொல்ல முடியும். ஆனால் எந்த நொடியில் வேண்டுமானாலும் இந்த நிலை மாறலாம் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது.
சீசன் உச்சகட்டத்தில் இருக்கும் போது மட்டுமே குற்றாலத்தில் குளிக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள் இன்று இதுவரை இருக்கும் நிலையை தெரிந்து கொண்டால் தங்களது பயணத்தை ஒத்தி வைக்கத்தான் செய்வார்கள் போல.