Entertainment
கூட்டம் குறைவாத்தான் இருக்குதாம்…அப்போ ரொம்ப நேரம் குளிக்கலாமோ?..
குற்றாலம் ஜூன், ஜூலை மாதங்களில் தவிர்க்க முடியாத மிக முக்கியமான தொரு சுற்றுலாத் தளம் என்றே தான் சொல்ல வேண்டும். இங்கே இருக்ககூடிய அருவிகளில் விழக்கூடிய தண்ணீரில் ஆனந்தமாக குளியல் போட்டு தங்களது ஆசையை நிறைவேற்றுக் கொள்ள சீசன் நேரத்தில் தமிழ் நாட்டின் எல்லா இடங்களிலுமிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக குற்றாலத்தை நோக்கி படை எடுத்து விடுவார்கள்.
மலையின் இடுக்குகளில் வெள்ளி நிறத்தில் விழும் தண்ணீரின் அழகை பார்ப்பதுவே மனதுக்கும் இதமானதாக இருக்கும். முக்கிய அருவிகளாக இங்கே பார்க்கப்படுவது ஐந்தருவி, மெயின் ஃபால்ஸ், பழைய குற்றால அருவிகள் தான்.
குடும்ப சகிதாமாக வந்து பாதுகாப்பாக குளித்து விட்டு செல்ல இங்கே ஏதுவான நிலை இருப்பதாலும் கூட இந்த அருவிகள் பிரதானப்படுகிறது.
கடந்த வாரத்தில் குளு, குளு சூழலோடு காட்சியளித்த குற்றாலத்தின் இந்த வார நிலை மாறுபட்டே உள்ளது. இன்று காலை பதினோறு மணி நிலவரப்படி பார்க்கும் போது வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது,. கடந்த சில நாட்களாகவே பார்த்தால் அருவிகளில் விழும் தண்ணீரின் அளவும் குறைந்தே வருகிறது.
இன்றும் அதே போலத் தான் இருக்கிறது அருவிகளில் விழும் தண்ணீர். அவ்வப்போது லேசான தென்றல் காற்று வீசினாலும்ம் சாரலுக்கான சாத்தியக்கூறுகள் அரவே இல்லை என்று தான் சொல்லியாக வேண்டும்.
வார நாட்கள் என்பதால் குற்றாலத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தே தான் காணப்படுகிறது. இன்று சீசன் மந்தமாக இருப்பதைப் போலவே தான் மக்கள் கூட்டமும் மந்தமாகவே காணப்பட்டது.