tamilnadu
சவுக்கு சங்கருக்கு ஜாமின்… கோவை நீதிமன்றம் உத்தரவு..!
பிரபல youtuber வரும் விமர்சகர்மான சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
youtuber சவுக்கு சங்கர் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருக்கின்றார். இது தொடர்பாக பெண் போலீசார் அளித்த புகாரின் பெயரில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்தார்கள். இதைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கேட்டு சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி கோவை சைபர் கிரைம் போலீசார் பெண் காவலர் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் youtuber சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.