tamilnadu
ஊறுகாய் வைக்காதது ஒரு குத்தமா..? வச்சு செய்த வாடிக்கையாளர்… அபராதம் விதித்த நீதிமன்றம்..!
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நல சங்கத்தின் தலைவராக இருக்கின்றார். இவரின் உறவினர் நேசம் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக 2022 ஆம் ஆண்டு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு உணவகத்தில் 25 சாப்பாட்டுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்து ஆர்டர் குடுத்து இருக்கின்றார்.
பின்னர் மறுநாள் வந்து அந்த ஆர்டர் படி 25 பார்சல் உணவை வாங்கி சென்றார். அதற்கு ஒரு ஹோட்டல் உரிமையாளரிடம் ரசீது கேட்டபோது அவர் ரசீது கொடுக்காமல் சிறிய பேப்பரில் எழுதிக் கொடுத்திருக்கின்றார். பின்னர் வீட்டிற்கு சென்ற ஆரோக்கியசாமி உணவு பொட்டலத்தை முதியோர்களுக்கு வழங்கி இருக்கின்றார்.
அப்போது அந்த பார்சல் உணவுடன் வழங்க வேண்டிய ஊறுகாய் இல்லாதது தெரியவந்துள்ளது. இது குறித்து ஆரோக்கியசாமி தனது ஹோட்டல் உரிமையாளர்களிடம் ஊறுகாய்க்குரிய தொகை ரூபாய் 25 ஐ திருப்பி கொடுக்கும்படி கேட்டிருக்கின்றார். ஆனால் ஹோட்டல் உரிமையாளர் அதனை தர மறுத்திருக்கின்றார். இதையடுத்து ஆரோக்கியசாமி விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் தீர்ப்பு கூறி இருக்கிறார்கள். அதில் ஆரோக்கியசாமி வாங்கிய பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு. இதனால் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூபாய் 30,000, வழக்கு செலவுக்கு 5000 ஊறுகாய் பொட்டலம் ரூபாய் 25, தொகைக்குரிய ஒரிஜினல் ரசீதும் வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கி 45 நாட்களுக்குள் அபராத தொகையை ஓட்டல் உரிமையாளர் செலுத்த வேண்டும். தவறினால் மாதம் 9 சதவீத வட்டியுடன் பணத்தை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருந்தார்.