Corona (Covid-19)
புதுக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் தற்கொலை!
புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் கொரோனா அறிகுறிகளோடு இருந்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனளிக்காமல் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகள் தற்போது சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசோடு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரொனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கொரொனா நோயாளிகளோடு தொடர்பு கொண்டவர்களை தனிமைப்படுத்தி வீடுகளிலேயே கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மரமடக்கி என்ற கிராமத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவரை அவரது பெற்றோர் கொரோனா அச்சத்தின் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.