கொரோனா தடுப்பூசிக்கு ஓரிரு வாரத்தில் உரிமம்

கொரோனா தடுப்பூசிக்கு ஓரிரு வாரத்தில் உரிமம்

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகள் தீவிரமாகி விட்டன. ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மருந்து கண்டுபிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை இந்திய மக்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல உள்ளது கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் பாரத் பயோடெக், சீரம், உள்ளிட்ட கம்பெனிகள் மருந்து தயாரித்து வருகிறது. பைசர் உள்ளிட்ட வெளிநாட்டு கம்பெனிகளும் தடுப்பூசிக்கு இந்தியாவில் அப்ளை செய்துள்ள நிலையில் ஓரிரு வாரத்தில் உரிமம் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக  செயலாளர் ராஜேஷ் பூஷண் தகவல் தெரிவித்துள்ளார்.