கேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது- மீண்டும் முழு ஊரடங்கு அமைச்சர் சைலஜா எச்சரிக்கை

கேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது- மீண்டும் முழு ஊரடங்கு அமைச்சர் சைலஜா எச்சரிக்கை

கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா லாக் டவுன் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் கேரளாவில் அதிக தொற்று இருந்தது. ஆனால் அடுத்த இரண்டு மாதங்களில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் கேரளாவில் தொற்று கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. 200, 300 என்ற அளவிலேயே மாநில அளவில் கொரோனா தொற்று இருந்தது.

இந்த நிலையில் தற்போது லாக் டவுன் ஓரளவு நீங்கி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் தொற்று அதிகம் இருப்பதாக கூறி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா மக்களை எச்சரித்துள்ளார்.

மக்கள் விதிகளை காற்றில் பறக்க விட்டதால் அதிக தொற்று பரவி வருவதாகவும் இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.