Latest News
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில்… ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி… இருக்கிற பிரச்சினையில்ல இது வேறயா..?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருக்கின்றது.
தமிழகத்தில் இன்று குரூப் 2 தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் இரண்டு 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் தேர்வு எழுதியிருந்தார்கள். குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சையான கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருந்தது. கேள்வித்தாளில் 96 ஆவது கேள்வியாக இடம்பெற்ற ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதாவது ஆளுநர் அரசின் தலைவர் மத்திய அரசின் பிரதிநிதி என இரண்டு வித பணிகளை செய்கின்றார் என்பதை கூற்றாகவும், காரணமாக ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
தற்போது தமிழக அரசு மற்றும் ஆளுநர் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் குரூப் 2 தேர்வில் இப்படி ஒரு சர்ச்சையான கேள்வி கேட்கப்பட்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் சனாதனம் குறித்து பேசியவர்கள் எல்லாம் தற்போது அமைதியாகி விட்டார்கள் என்று சமீபத்தில் ஆளுநர் ஆர் என் ரவி அமைச்சர் உதயநிதியை மறைமுகமாக சீண்டி பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.