Latest News
சென்னை பள்ளிகளில் ஏற்பட்ட சொற்பொழிவால் சர்ச்சை… 3 நாட்களில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…!
சென்னை பள்ளிகளில் சொற்பொழிவால் சில சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் இருக்கும் பள்ளிகளில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 28ஆம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது காலையில் அசோக் நகர் பள்ளியிலும் மாலையில் சைதாப்பேட்டை பள்ளியிலும் இந்த சொற்பொழிவு நடத்தப்பட்டது. இதனை மகாவிஷ்ணு என்ற நபர் நடத்தி இருந்தார்.
இரு பள்ளிகளிலும் இவர்தான் சொற்பொழிவு ஆற்றினார். காலையில் அசோக் நகர் பள்ளியில் அவர் சொற்பொழிவு நடத்திய போது வேத மந்திரங்கள் குறித்து பேசியதாக தெரியவந்திருக்கின்றது. அந்த வேத மந்திரங்களை அவர் மாணவிகளை திரும்ப சொல்ல வைத்து பேசியதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து சைதாப்பேட்டையில் அரசு பள்ளியில் பேசியபோது பாவம், புண்ணியம், மறுபிறவி உள்ளிட்டவற்றை குறித்து பேசி இருக்கின்றார்.
முன் ஜென்ம பாவங்கள் செய்தவர்கள் தான் மறுபிறவியில் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இதனால் அந்த பள்ளியில் இருந்த மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கும் அவருக்கும் இடையே மிகப்பெரிய சண்டையில் ஏற்பட்டது. மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக தான் சொற்பொழிவு நடத்த வேண்டும் என்று ஆசிரியர் சங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விஷ்ணு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. நேற்று இது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இன்று மதியம் மகாவிஷ்ணு சென்னை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உடனடியாக விசாரணை நடத்தி வரும் நிலையில் 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.