tamilnadu
மாற்றுத்திறனாளிகள் இப்படி பயணிக்க கண்டக்டர்கள் உதவ வேண்டும்… போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு…!
மாற்றுத்திறனாளிகள் சேருடன் பயணிப்பதற்கு கண்டக்டர்கள் உதவி செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஓடும் புதிய தாழ்வான பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் தங்களது நான்கு சக்கர நாற்காலியுடன் சென்று பயணம் செய்யும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஏற்றி இறக்குவதற்கு கண்டக்டர் டிரைவர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பயணிக்க முயலும் போது சக்கர நாற்காலிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் உள்ள சாய்த்தளத்தை உபயோகப்படுத்த மற்றும் அவர்கள் ஏறுவதற்கு உதவி செய்ய வேண்டும். பயணம் செய்யும்போது அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சக்கர நாற்காலிகளை பஸ்ஸில் அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் லாக் செய்ய கண்டக்டர் உதவி செய்ய வேண்டும்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகள் இறங்கும்போதும் சாய்தள படிக்கட்டை இறக்கி சக்கர நாற்காலியுடன் பஸ்ஸிலிருந்து அவர்களை பாதுகாப்பாக இறக்கி விட வேண்டும். இதில் எந்தவித புகார் வராத வகையில் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.