Connect with us

வந்தாச்சு செப்டம்பர் 1… ஏறிடுச்சு சிலிண்டர் விலை… முழு விவரம் இதோ…!

Latest News

வந்தாச்சு செப்டம்பர் 1… ஏறிடுச்சு சிலிண்டர் விலை… முழு விவரம் இதோ…!

வணிக பயன்பாட்டிற்கு உபயோகப்படும் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதால் வணிகர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.

எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் குறைவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கும். அந்த வகையில் செப்டம்பர் 1-ம் தேதியான இன்று சிலிண்டர் விலையை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 818.70-க்கு நீடிக்கின்றது. ஆனால் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 38 ரூபாய் உயர்ந்து 1855 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.

மேலும் கடந்த மாதம் 7.50 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது 38 ரூபாய் உயர்ந்திருப்பது வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் சென்னையில் தொடர்ந்து 167 வது நாள பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 காசுகளுக்கும், டீசல் விலை 92. 34 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

More in Latest News

To Top