நாங்க தான் மாஸ்… மின்சார ரயிலில் ஜன்னலில் தொங்கியபடி அட்டகாசம் செய்த மாணவர்கள்…!

நாங்க தான் மாஸ்… மின்சார ரயிலில் ஜன்னலில் தொங்கியபடி அட்டகாசம் செய்த மாணவர்கள்…!

மின்சார ரயில் மாணவர்கள் ஜன்னலில் தொங்கியபடி ஆபத்தாக பயணம் செய்த சம்பவம் மிக பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.

திருவள்ளூர் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். கல்லூரிக்கு வருவதற்கு பேருந்துகள் ரயில்கள் போன்றவற்றில் பயணம் செய்யும் மாணவர்கள் தொடர்ந்து ரூட்டு தல என்ற பிரச்சனையின் மூலமாக அடிக்கடி மோதல் செய்து வருகிறார்கள். பஸ் ரயில்களில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்து மற்ற பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றார்கள்.

இதை தட்டிக் கேட்கும் பொதுமக்களிடமும் மோதலில் ஈடுபட்டு தகராறு செய்யும் சம்பவமும் நடந்து வருகின்றது. இந்நிலையில் திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் பெட்டியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஒரே பெட்டியில் ஏறி உள்ளனர். அப்போது ரயில் புறப்பட்டதும் ரகலையில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள்.

சில மாணவர்கள் மின்சார ரயிலின் ஜன்னலில் ஏறி நின்றபடி கூச்சலிட்டு சாகச பயணம் செய்திருக்கிறார்கள். பச்சையப்பா கல்லூரி மாஸ்… என்று சத்தமிட்டபடி அவர்கள் பயணம் செய்த வீடியோவானது இணையத்தில் வைரலானது. அது மட்டும் இல்லாமல் அதில் பயணம் செய்த பயணிகள் இந்த மாணவர்களால் மிகுந்த அவுதி அடைந்துள்ளார்கள்.

அதில் சிலர் மாணவர்களை கண்டித்த போது அவர்களையும் கிண்டல் செய்து ரகலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது குறித்து பயணிகள் தெரிவித்த போது மாணவர்கள் ஆபத்தான நிலையில் ரயில் பெட்டிகளின் ஜன்னலில் நின்றபடி பயணம் செய்வதை பார்ப்பதற்கு மிக பயமாக இருந்தது. மாணவர்களின் அட்டகாசத்தால் பயணிகளுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டது. பெரும்பாலான ரயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக போலீசார் யாரும் இல்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.