Latest News
ஓடும் பேருந்தில் உடைந்து விழுந்த படிக்கட்டுகள்… பயணிகள் அதிர்ச்சி…!
திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் இருந்து படிக்கட்டுகள் உடைந்து விழுந்தது பயணிகள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள கல்லுப்பட்டி வழியாக ஒட்டன்சத்திரத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்து வழக்கம் போல் ஒட்டச்சத்திரத்திலிருந்து கிளம்பி வேடசந்தூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தார்கள்.
வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து நிலையம் சமயத்தில் பேருந்தில் பின் பக்கவாட்டு பகுதி திடீரென்று பலத்த சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்தது. இதை பார்த்த பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது. உடனே பேருந்தில் இருந்த பயணிகள் மிகுந்த கவனத்துடன் கீழே இறங்கினார்கள்.
இந்த சம்பவத்தால் வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. படிக்கட்டில் இருந்து உடைந்த பாகங்களை டிரைவர் மற்றும் கண்டக்டர் சேகரித்துக் கொண்டு பின்னர் பணிமனைக்கு பேருந்தை இயக்கிக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.