Latest News
உடல் உறுப்பு தானம் செய்ய முதல்வர் பதிவு… அமைச்சர் மா சுப்பிரமணியன் சொன்ன தகவல்..!
உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முதலமைச்சர் பதிவு செய்திருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கின்றார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் உறுப்பு தான நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடல் உறுப்பு மாற்று விழிப்புணர்வு கையேடு மற்றும் மறுபிறவி என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு குறித்து குறுந்தகட்டினை வெளியிட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியின் உறுப்பு கொடையாளர்கள் குடும்பத்தினருக்கு கௌரவம் செய்யப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய மா. சுப்பிரமணியன் கூறியதாவது ‘உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 1998 உறுப்புக்கொடையாளர்கள் உருவாகி இருக்கின்றார்கள்.
இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு கொடையாளர்களின் மூலம் பெறப்பட்ட இதயம் 892, நுரையீரல் 912, கல்லீரல் 1794 , சிறுநீரகம் 3544, சிறுகுடல் 15, வயிறு 1, கை 7, கணையம் 42 என 7,207 முக்கிய உறுப்புகள் பயன்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 2021 முதல் தற்போது வரை 585 பேர் உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறார்கள்.
மு க ஸ்டாலின் மியாட் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்திருக்கின்றார் என்று தெரிவித்து இருக்கின்றார். ஒவ்வொருவரும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதற்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் அந்த நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.