Latest News
பிரதமர் மோடியின் பிறந்தநாள்… தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து…!
பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.
இந்தியாவின் பிரதமராக 3 முறையும், குஜராத்தின் முதல்வராக 4 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நரேந்திர மோடி. அவர் தன்னுடைய 74வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். இதனை ஒட்டி பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல் மந்திரிகள், மாநில கவர்னர்கள், மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தொடர்ந்து வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் அவர் தெரிவித்திருந்ததாவது “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் ஆண்டுகளில் நீண்ட ஆயுளும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டு இருந்தார். மேலும் தமிழகத்தை சேர்ந்த பல அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.