---Advertisement---

சாலை விபத்தில் 6 பேர் பலி… நிவாரணம் அறிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்…!

Published on: September 25, 2024
---Advertisement---

சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது

“திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், மேட்டத்தூர் கிராமம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் J.S.நகர் அருகில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் TN73 M 8384 என்ற பதிவெண் கொண்ட வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இராணிப்பேட்டை மாவட்டம், மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரவி, செல்வம், ராமலிங்கம், முருகன், துரை மற்றும் சக்தி ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்து இருக்கின்றார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

தனுஷின் D55 பட அறிவிப்பு மற்றும் புதிய தயாரிப்பு கூட்டணி புகைப்படம்

தனுஷின் D55 அதிரடி மாற்றம்! ராஜ்குமார் பெரியசாமியுடன் புதிய தொடக்கம்!

சிம்பு மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து பணியாற்றப்போகும் புதிய படம் குறித்த செய்திப் புகைப்படம்.

சிம்பு – ஏ.ஆர். முருகதாஸ் மெகா கூட்டணி! ‘அரசன்’ படத்திற்குப் பிறகு ‘ஆத்மன்’ செய்யப்போகும் அதிரடி என்ன?

வடிவுக்கரசி நடிப்பில் உருவாகியுள்ள கிராண்மா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு புகைப்படம்.

வடிவுக்கரசியின் மிரட்டலான ‘கிராண்மா’ ரிலீஸ் தேதி இதுதான்! தியேட்டருக்கு வரும் திகில் பாட்டி!

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

கராத்தே பாபு டீசர் ரிலீஸ்! “யாரையும் குறி வச்சு எடுக்கல” – ரவி மோகன் படக்குழு திடீர் எச்சரிக்கை பின்னணி என்ன?

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

மங்காத்தா 2 தயார்! ஆனா ஒரு கண்டிஷன்.. வெங்கட் பிரபு சொன்ன அந்த ஒரு வார்த்தை – அஜித் ரசிகர்கள் ஹேப்பி!

திரௌபதி 2 படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் இயக்குநர் மோகன் ஜி.

திரௌபதி 2: தடையை மீறி ரிலீஸாகுமா? நீதிமன்ற வழக்கு முதல் கத்தார் தடை வரை.. மோகன் ஜி-யின் அடுத்த அதிரடி!