Connect with us

சாலை ஓர விபத்து… 5 பேர் பலி… நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!

tamilnadu

சாலை ஓர விபத்து… 5 பேர் பலி… நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!

சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராத விதமாக வாகனம் மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் வளம்பக்குடி அருகில் இன்று காலை 7:00 மணியளவில் கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டு இருந்தவர்கள் மீது எதிர்பாராத விதமாக ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் முத்துசாமி, ராணி, மோகனாம்பாள் மற்றும் மீனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் தனலட்சுமி என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு நான் மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வரும் சங்கீதா என்பவருக்கு சிறப்பான சிகிக்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் இந்த விபத்தில் உயர்ந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதற்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்திருக்கின்றார்.

More in tamilnadu

To Top