Connect with us

கிரீன் பன்னுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி-னு கேட்க கூட உரிமை இல்ல… முதல்வர் மு க ஸ்டாலின்…!

Latest News

கிரீன் பன்னுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி-னு கேட்க கூட உரிமை இல்ல… முதல்வர் மு க ஸ்டாலின்…!

கிரீம் பன்னுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி என்று கேட்கக்கூட உரிமை இல்லாத நிலை தற்போது உருவாகியுள்ளது என முதல்வர் மு க ஸ்டாலின் கூறியிருக்கின்றார்.

செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக கட்சி தொடங்கப்பட்ட நாளும் கூட இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா திமுக சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு திமுக தொடங்கப்பட்ட 75 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி பவள விழா ஆண்டாக கொண்டாடப்படுகின்றது.

திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் இன்று நடைபெற இருக்கின்றது. திமுக முப்பெரும் மற்றும் பவள விழாவில் பேசுவதற்கு முன்பு ‘கலகம் நல்ல கழகம்.. திராவிட முன்னேற்றக் கழகம்..’ என்ற பாடலை முதல்வர் மு க ஸ்டாலின் பாடினார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாட்கள் அமெரிக்கா பயணம் நானும் தம்பி டி ஆர் பி ராஜாவும் சென்றோம்.

சென்றோம் என்று கூறுவதை விட வென்றோம் என்று தான் கூற வேண்டும். இந்த முதலீடுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை எண்ணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கு அமெரிக்காவால் மக்கள் கொடுத்த வரவேற்பை மறக்க முடியாது. தமிழ்நாடும், திமுகவும் எனது இரண்டு கண்கள் என செயல்பட்டு வரும் இந்நேரத்தில் பவள விழாவில் பங்கேற்பதை நான் வாழ்நாள் பெருமையாக பார்க்கின்றேன்.

ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இதற்கு நமது அமைப்பு முறை தான் காரணம் என்று தைரியமாக கூறுவேன். 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகள் செய்திருக்கின்றோம். திமுக இன்னும் 100 ஆண்டுகளுக்கு உள்ளது. எல்லா கனவுகளும் நிறைவேற்றி விட்டது என்றால் இல்லை எல்லா நெருக்கடிகளுக்கும் மத்தியில் தான் மாநிலத்தை முன்னேற்றம் ஒற்றுமை இலக்குடன் அரசு செயல்படுகின்றது.

இன்று கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என கேட்க கூட உரிமை இல்லாத நிலை உருவாகி இருக்கின்றது. எதிர்வரும் தேர்தலில் நமக்கு தான் வெற்றி. இதை ஆணவத்தில் உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் கூறுகிறேன். நம்முடைய இலக்கு 2026 தேர்தல். இதுவரைக்கும் இப்படி ஒரு வெற்றியை எந்த ஒரு கட்சியும் பெற்றது இல்லை என்று வரலாறு கூற வேண்டும் என தெரிவித்து இருக்கின்றார்.

More in Latest News

To Top