Latest News
அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின்… பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்ற மக்கள்…!
அமெரிக்க சென்ற முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மக்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்று இருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 19 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 27ஆம் தேதி இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இரவு 10:30 விமானம் மூலமாக துபாய் சென்று அங்கிருந்து மற்றொரு விமானம் மூலமாக அமெரிக்கா சென்றடைந்தார்.
அமெரிக்க சென்ற முதல்வர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. கலிபோர்னியாவில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கினார்கள்.
இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றார். இதற்கு இடையில் நடிகர் நெப்போலியன் முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து இருக்கின்றார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.
View this post on Instagram