---Advertisement---

கனமழை பாதிப்பு… பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனே இத செய்யுங்க… முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்…!

Published on: July 20, 2024
---Advertisement---

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சேர்ந்த கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் பலத்த மழை காரணமாக அதிக அளவில் வெள்ளம் தேங்கி இருக்கின்றது.

மேலும் இந்த பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதே போல் கனமழை பெய்து வரும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பேரிடர் மீட்பு பணியினர் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிக்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலகத்தில் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டார்கள். அதில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை உடனே துரித படுத்த வேண்டும்.

நிவாரண மையங்களை அமைத்து மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களை அங்கு பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றார். மேலும் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரிடம் அந்தந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார். மழை நிலவரத்திற்கு ஏற்ப உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.