Latest News
சென்னையில் நேற்று பகலில் வாட்டி எடுத்த வெயில்… இரவு கொட்டி தீர்த்த கனமழை…!
சென்னையில் நேற்று பகலில் வெயில் வாட்டி எடுத்த நிலையில் இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்து வந்தது.
சென்னையில் ஒவ்வொரு நாளும் வானிலை மாறி மாறி இருந்து வருகின்றது. நேற்று முன்தினம் காலையில் லேசான மழை பெய்தது. அன்றைய தினம் பெரும்பாலான இடங்களில் மாலை வரை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. ஆனால் நேற்று காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்தது. காற்றும் வீசாத காரணத்தினால் வீட்டில் இருக்கவே முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. சென்னை கிண்டி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், தரமணி, அடையாறு, மெரினா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் காலை முதல் சில்லென்று வானிலை நிலவி வருகின்றது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், ஆவடி போன்ற இடங்களிலும் லேசான மழை பெய்தது.
இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்படும் வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தின் காரணமாக நாளை மறுநாள் புதிதாக காற்று தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை தெரிவித்து இருக்கின்றது. இதனால் தமிழகத்தில் வட மாவட்டங்கள் உள்ளிட பல்வேறு பகுதிகளில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை எச்சரித்து இருக்கின்றது.
தமிழகத்தில் சில நாட்கள் வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில் தற்போது பெய்த மழை குளுமையான சூழலை உருவாக்கி இருக்கின்றது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை தெரிவித்திருக்கின்றது.