tamilnadu
அப்படியெல்லாம் விடுவிக்க முடியாது… செந்தில் பாலாஜி மனு… நீதிமன்றம் மறுப்பு…!
செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்து இருக்கின்றது.
தமிழக முன்னாள் முதலமைச்சரான செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்றத் தடை சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணை செய்தது.
ஏற்கனவே இருதரப்பு வாதங்களையும் கேட்டிருந்த நீதிபதி அல்லி வழக்கை நேற்றைக்கு ஒத்தி வைத்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றது. அதில் ஒரு மனுவில் வங்கிகள் வழங்கி இருக்கும் ஆவணங்களுக்கும் அமலாக்கத்துறை வழங்கி இருக்கும் ஆவணங்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கின்றது.
அமலாக்கத்துறை வழங்கியிருக்கும் ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளது. தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அதனை ஆராய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். மற்றொரு மனுவில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வங்கியில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை தான் நாங்கள் வழங்கினோம். இந்த வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் செந்தில் பாலாஜி இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதங்கள் வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் வழக்கிலிருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் குற்றச்சாட்டுகள் பதிவுக்கான வழக்கின் விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருக்கின்றார்.