Latest News
அமைச்சர் செந்தில் பாலாஜி அக்டோபர் 4ல் மீண்டும் ஆஜராகனும்… நீதிமன்றம் உத்தரவு…!
அமைச்சர் செந்தில் பாலாஜி அக்டோபர் 4-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்கள்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி பலமுறை மனு தாக்கல் செய்திருந்தார். இதை அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செந்தில் பாலாஜி அமலாகத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சியங்களை கலைக்க கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். வாரத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று செந்தில் பாலாஜி முதல் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டிருக்கின்றார். அதன்படி வருகிற அக்டோபர் நான்காம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.