Latest News
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி இருக்கின்றது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால் 10-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.