Latest News
கிரகங்களில் யுத்தம்…அதிர வைக்க போகும் ஐப்பசி?…ஜோதிடம் என்ன சொல்கிறது….
அறிவியலின் அபரிதமான வளர்ச்சியால் இந்த பூமி எராளமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. வளர்ச்சி எல்லா விஷயங்களிலும் இருக்க, அதற்கு நிகரான வீழ்ச்சிகளையும் இந்த உலகம் பார்த்து வருகிறது. உலகையே ஆட்டிப்படைத்த கொரனா தான் இந்த 21ம் நூற்றாண்டில் இதுவரை மனித இனம் பாரத்த மிகப்பெரிய கொடூர நோய்.
விஞ்ஞான ரீதியாக இதை பற்றிய் ஆராய்ச்சியும் அலசல்களும் ஒரு புறம் இருக்க வானியல் சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதும் தேடப்படுகிறது. கொரனாவிற்கு பிறகு தட்ப வெட்ப நிலையில் கடுமையான மாற்றங்கள் இருந்து வருகிறது. இதை பற்றிய தனது கணிப்பை சொல்லியிருக்கிறார் திருநெல்வேலியை சேர்ந்த பெண் ஜோதிடர் ஜெயசித்ரா.
கிரங்களில் ஏற்பட்ட யுத்தத்தினால தான கொரனா என்னும் கொடிய நோயை பார்க்க வேண்டியது நிலை இருந்தது. அதே போல வருகிற ஐப்பசி மாதத்திலிருந்து சீதோஷன நிலைகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்குமாம்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இந்த வருடம் ஐப்பசி மாதம் அக்டோபர் 18ம் தேதியில் பிறக்க இருக்கிறதாம். ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி ஒரு நாள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 17ம் தேதியே பிறந்து விடுமாம்.
தற்போது வெயில் நேரத்தில் திடீரென அடை மழை பெய்வதும். மழை நேரத்தில் வெயில் வாட்டி வரும் சூழல் இருந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் சில ஆண்டுகளுக்கு முன்னர் எற்பட்ட கிரக யுத்தம் தான் எனவும். இந்த நிலை தான் இனி வரும் காலங்களில் தொடரும் என்பதோடு மட்டுமல்லாமல் இனி இது அதிகரிக்கும் என ஜோதிடம் சொல்கிறதாம்.
இதனால் முன்னர் போல கத்திரி வெயில் வைகாசி மாதத்தில் மட்டும் தான் அடிக்கும் என சொல்ல முடியாது. பனிப்பொழிவை அதிகாமாக கொடுக்கும் மார்கழியில் கூட வெயில் வெளுத்து கட்டும் . அதே போல கடல்களில் கள்ள அலைகள் உருவாகுமாம். ஜோதிடர் ஜெயசித்ரா சொல்வது போலே தான் தற்போது சென்னையின் பருவ நிலையும் இருந்து வருகிறதா என யோசிக்க வைத்துள்ளது கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் கன மழை.