Business
ஷாக் கொடுத்த செல்லிங் பிரைஸ்!…இவ்ளோவா குறைஞ்சிருக்கு இன்னைக்கு தங்கத்தோட விலை?…
கடந்து வார இறுதியில் மெதுவாக உயரத்துவங்கியது சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஓரிரு நாட்கள் மாற்றம் ஏதும் காணாமல் அதே நிலை தொடர்ந்தது. திங்கட்கிழமையான நேற்று விலை குறைந்து அதிரடி காட்டியது தங்கம். இது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் இருக்கிறதா? என ஆராய்ந்து அதன் பின்னரே நகை வாங்கச் செல்லும் கூட்டமும் இருந்து தான் வருகிறது. தங்க விலை இறங்கு முகமாக தொடர்ந்து இருக்கக் கூடாதா? என எதிர்பார்த்தாலும் சர்வதேச பொருளாதார சூழலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தான் மாற்றத்திற்கு காரணமாக இருந்து வருகிறது. இதனால் தான் நிலை இல்லாத தன்மை தொடர்கிறது என்று சொல்லலாம்.
சென்னையில் இன்று விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் (22 கேரட்) ஆபரணத்தங்கத்தின் விற்பனை விலையில் அதிர்ச்சி தரும் வீழ்ச்சி காணப்பட்டது.
நேற்றை விட இன்று தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூபாய் முப்பது குறைந்து (ரூ.30/-) ஆராயிரத்து எழு நூற்றி எழுபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது (ரூ.6770/-). சவரனுக்கும் இரு நூற்றி நாற்பது ரூபாய் குறைந்து (ரூ.240/-) ஐம்பத்தி நான்காயிரத்து நூற்றி அறுபது ரூபாயாக (ரூ.54,160/-) உள்ளது.
இதே போல் வெள்ளியின் விலை நேற்றை விட இன்று ஐம்பது காசுகள் (50/-காசுகள்) குறைந்துள்ளது கிராமிற்கு. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று தொன்னூற்றி ஒன்பது ரூபாயாக (ரூ.99/-) உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை தொன்னூற்றி ஒன்பது ஆயிரமாத்திற்கு (ரூ.99,000/-) விற்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருவது நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.