Latest News
பேக்- அடித்த தங்கத்தின் விலை…வெள்ளி விலையும் வேரியேசன் காட்டியிருக்கே இன்று….
தங்கத்தின் விலை ஒரு சில நாள் ஏறுமுகத்திலும் சில நாட்கள் இறங்கு முகத்திலும் இருந்து வருவது சகஜமாகி விட்டது. தங்கத்தின் மீதான மக்களின் மோகம் அதிகரித்தே வருவதால் தான் விலையில் இந்த ஏற்ற, இறக்கங்கள் எனக்கூட சொல்லலாம். அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும், சர்வதேச பொருளாதார சூழலுமே தங்கததின் விலையை தீரிமாணிக்கும் சக்திகளாக இன்று வரை இருந்து வருகிறது.
கடந்த வாரத்தில் பல மாற்றங்களை காட்டியே வந்தது சென்னையின் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை. அதே போல் தான் வெள்ளியின் விலையும் வேரியேஸ்ன் காட்டியே வந்தது. எப்போதும் போலத்தான் ஏற்ற இறக்கங்களோடு தான் இருந்து வந்தது தங்கத்தின் விற்பனை விலை. இந்த நிலையில் இன்று சென்னையின் ஒரு சவரன் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விற்பனை விலை ஐம்பத்தி நாலாயிரத்து இரு நூற்றி என்பது ரூபாயாக உள்ளது (ரூ.54,280/-) .
இது நேற்றைய விலையை விட சவரனுக்கு நூற்றி அறுபது ரூபாய் குறைவே(ரூ.160/-).
இதனால் ஒரு கிராமின் விலை ஆராயிரத்து எழ நூற்றி என்பத்தி ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது(ரூ. 6785/-). இது நேற்றை விட இருபது ரூபாய் குறைவே (ரூ.20/-). இதே நிலை தான் வெள்ளியின் விற்பனை விலையிலும் ஒரு கிராமுக்கு முப்பது காசுகள் குறைந்தே விற்கப்படுகிறது நேற்றைவிட.
ஒரு கிராம் தொன்னூற்றி ஒன்பது ரூபாய் எழுபது காசுகளாக (ரூ.99.70/-) உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை தொன்னூற்றி ஒன்பதாயிரத்து எழநூறு ரூபாயாக (ரூ.99,700/-)உள்ளது.