tamilnadu
அடேங்கப்பா… மாணவிகளுக்கு 1000 ரூபாய்… ஒரே மாதத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்…!
மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம் மூலமாக தமிழகத்தில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மாநில திட்டக் குழுவை சேர்ந்த மருத்துவர் கூறியிருக்கின்றார்.
மாநிலத் திட்டக் குழுவின் ஐந்தாவது ஆலோசனை கூட்டம் நேற்று முதல் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை அந்த குழு வழங்கியிருந்தது. மேலும் அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன. எவ்வாறு வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து சில புள்ளி விவரங்களை திட்டக்குழு உறுப்பினர் அமலோற்பவநாதன் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். புதுமை பெண் திட்டம் தொடர்பாக 8 மாவட்டங்களில் மாநிலத் திட்ட குழு சார்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் முதல் ரிப்போர்ட் படி 2022 முதல் 23ஆம் கல்வியாண்டில் இந்த மாவட்டங்களில் 13,681 பெண்கள் கூடுதலாக உயர்கல்விக்கு சென்று இருக்கிறார்கள்.
இது 6.9 சதவீதம் அதிகமாகும். சுமார் 7 சதவீதம் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் கூடுதலாக உயர்கல்வி செல்பவர்களில் 38.6 சதவீதம் பேர் இந்த பட்டியலில் சேர்ந்து இருக்கிறார்கள். 34.4 சதவீதம் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், 24.8% பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறத்தை சேர்ந்த மிகவும் பின்தங்கிய மாணவிகள் அதிக பயன் அடைந்து இருக்கிறார்கள். உயர்கல்வியை நோக்கி வருவதற்கு புதுமைப்பெண் திட்டம் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் பணத்தை மாணவிகள் எப்படி செலவழிக்கிறார்கள் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளில் உற்சாகமூட்டக்கூடியதாக இருக்கின்றது. மாணவி புதுமை திட்டம் மூலம் கிடைக்கும் பணத்தை 62% கணினி சார்ந்த பயன்பாட்டுக்காகவும், ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காகவும் மாணவிகள் செலவிட்டு வருவது தெரியவந்துள்ளது.