Latest News
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. அடுத்ததாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யக்கூடிய வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த காலகட்டத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்து 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கின்றது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்பு இருக்கின்றது.
வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மலையும் பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது” என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.