Latest News
8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கின்றது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. அதன்படி கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது குறிப்பிடத்தக்கது.