Latest News
தமிழகத்தில் 5 மாவட்டங்களில்… இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழக மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
மேலும் சென்னையை பொறுத்த வரை அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மலைக்கு வாய்ப்பு இருக்கின்றது. கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மழை கொட்டுகிறது. அதிலும் நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கின்றது.